உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு நடுநிலைப்பள்ளிகளில் எமிஸ் பதிவு கணினி பட்டதாரிகள் 271 பேர் தேர்வு

அரசு நடுநிலைப்பள்ளிகளில் எமிஸ் பதிவு கணினி பட்டதாரிகள் 271 பேர் தேர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு நடுநிலை பள்ளிகளில் எமிஸ் பதிவு மேற்கொள்ள, 271 கம்ப்யூட்டர் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், அரசு பள்ளி மாணவ-மாண-விகளுக்கு, அடையாள எண் வழங்கப்பட்டு, 'எமிஸ்' இணையத-ளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பள்ளி ஆசிரியர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பணிச்சுமையாக இருப்ப-தாகவும், இப்பணியில் இருந்து விலக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து எமிஸ் பதிவுக்கான பணியா-ளர்களை, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களில், கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளை, முன்னுரிமை அடிப்ப-டையில் தேர்வு செய்ய, ஆன்லைன் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி அடைந்தவர்களின் பட்டியல், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்-டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக, 315 பள்ளி-களில், 319 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, 319 எமிஸ் பதிவு பணியாளர்களுக்கான (கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்) நேர்முக தேர்வு ஜூனில் நடந்தது. இதில், 271 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்து, தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும். அதன் பிறகு சம்மந்-தப்பட்ட நிறுவனம் மூலம், பணியாணை வழங்கப்படும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ