காங்கேயம் நகராட்சியில் 35 தீர்மானம் நிறைவேற்றம்
காங்கேயம், காங்கேயம் நகராட்சி சாதாரண மற்றும் அவசர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது.தலைவர் சூர்யபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், நகராட்சி துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.நகராட்சி தற்காலிக ஓட்டுனர் ஊதியத்துக்கு, 3 லட்சம் ரூபாய், ஜேசிபி இயந்திரம் பழுது பார்க்க, 7 லட்சம் ரூபாய், புதிய அலுவலகத்திற்கு சேர், டேபிள், பர்னிச்சர் வாங்க, 40 லட்சம் ரூபாய், டெங்கு கொசு பணியாளர்களை நியமிக்க, 30 லட்சம் ரூபாய் என, 2.15 கோடி ரூபாய் செலவுக்கு, 35 தீர்மானம் நிறைவேற்றினர்.