காங்கேயம் நகராட்சியில்36 தீர்மானம் நிறைவேற்றம்
காங்கேயம் நகராட்சியில்36 தீர்மானம் நிறைவேற்றம்காங்கேயம்:காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், நகராட்சி துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். நகராட்சி வார்டுகளில் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண, குழாய் உடைப்பு சீரமைப்பு, மின்மோட்டார் மற்றும் சிறு மின் விசைபம்புகள் பழுது சரி செய்தல், நகராட்சி கட்டடங்களில் சேதங்களை சரி செய்தல், தெருவிளக்கு பராமரிப்பு உட்பட, 36 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.