உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆட்டோ மீது பைக் மோதி மாணவன் பலி

ஆட்டோ மீது பைக் மோதி மாணவன் பலி

காங்கேயம்: முத்துார் அருகே சந்தைபேட்டையை சேர்ந்த ஜெகநாதன், 108 ஆம்புலன்சில் பணிபுரிகிறார். இவரது மகன் மோகனபிரசாந்த், 24, மொடக்குறிச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாலி-டெக்னிக்கில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை நண்பர் ரமேஷ் பைக்கை வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்துள்ளார். முத்துார் கொடுமுடி சாலையில் சென்றபோது, பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ மீது மோதியது.இதில் மோகன பிரசாத் பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்டு, கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்-தவர்கள் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மோகன பிரசாத் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை