உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழை வேண்டி இஸ்லாமியர் தொழுகை

மழை வேண்டி இஸ்லாமியர் தொழுகை

ஈரோடு:தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை சார்பில், தமிழகத்தில் மழை வேண்டி, சிறப்பு தொழுகை, சிறப்பு பிரார்த்தனையில் நேற்று ஈடுபட்டனர். இதன்படி ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் மஸ்ஜித்தில், சிறப்புத் தொழுகை மற்றும் சிறப்பு பிரார்த்தனை நேற்று நடந்தது. தாவூதிய்யா அரபி கல்லுாரி முதல்வர் முஹம்மது யூசுப் தாவூதி தலைமை வகித்தார். மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா குத்பா பிரசங்கம் செய்தார். இதில் ஈரோட்டை சேர்ந்த இமாம் நிர்வாகிகள், ஜமா அத்தார்கள் மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ