மேலும் செய்திகள்
விதிமீறிய 47 கடைகள் மீது நடவடிக்கை
16-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வர், உதவி ஆய்-வர்கள் கடந்த ஆக., மாதம் ஆய்வு செய்தனர். எடையளவு சட்டத்தில், 96 கடைகளில் ஆய்வு செய்ததில், 29 கடைகளில் முரண்பாடு; பொட்டல பொருட்கள் விதியின்ல், 91 கடை, நிறுவனங்-களில் நடத்திய ஆய்வில் நான்கு கடைகளிலும் முரண்பாடு கண்டறியப்பட்டது. குழந்தை தொழிலாளர் கூட்டாய்வில், அந்தியூர் பகுதியில் ஒரு இறைச்சி கடையில், ஒரு வள-ரிளம் பருவ தொழிலாளர் மீட்கப்பட்டார்.திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களை வினியோகிக்கும் நிறுவனங்கள், 48ல் நடத்தப்-பட்ட ஆய்வில், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்காத, ஒரு நிறுவனம் மீது, கேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டது.
16-Aug-2024