உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல்கள் ௨வது நாளாக நீதிமன்றம் புறக்கணிப்பு

வக்கீல்கள் ௨வது நாளாக நீதிமன்றம் புறக்கணிப்பு

ஈரோடு:புதியதாக அமலுக்கு வந்துள்ள மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்) சார்பில், நேற்று முன்தினம் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் புறக்கணிப்பை தொடர்ந்தனர்.ஈரோடு பார் அசோசியேசன் வக்கீல்கள் சம்பத்நகரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நீதிமன்றத்தை புறக்கணித்தனர். ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமையில் செயலாளர் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் மாரியப்பன், வக்கீல்கள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் பெருந்துறை நீதிமன்ற வளாகத்தில், பெருந்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ