உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேட்டூர் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு : ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசல், தீர்க்கப்பட முடியாத பிரச்னையாக இருந்து வருகிறது. சுவஸ்திக் கார்னர், அரசு ஆஸ்-பத்திரி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில், தினமும் பகலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மேட்டூர் சாலையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் நிலவு-கிறது. சாலை குறுகலாக இருப்பதாலும், வாகனங்கள் அதிகம் செல்வதாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தாலும், நெரிச-லுக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.மீனாட்சிசுந்தரனார் சாலையையும், பெருந்துறை சாலையையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும்போதே, மேட்டூர் சாலையில் புது மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை செய்தனர். ஆனால், பணி கைவிடப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் சாலையில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா முதல் சுவஸ்திக் கார்னர் வரை, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால், ஆம்பு-லன்ஸ்களும் நெரிசலில் சிக்கித்தவித்தன.மேட்டூர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்-டத்தை செயல்படுத்த, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை