உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழை பெய்ய வேண்டி பொலி காளை இழுப்பு

மழை பெய்ய வேண்டி பொலி காளை இழுப்பு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையத்தில், கருமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், 16 ஆண்டுக்கு பிறகு பொலி காளை இழுத்தல் நிகழ்ச்சி, கோவில் மைதானத்தில் நடந்தது.முன்னதாக சுற்றுவட்டார பகுதி வாலிபர்கள், கோவை மாவட்டம் அன்னுார், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காளைகளை பிடித்துக்கொண்டு மேள, தாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பிறகு காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து, கோவிலை சுற்றி அழைத்து வந்தனர். இதை தொடர்ந்து மாடுகள் நலம் பெறவும், கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், பொலி காளை இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் ஒரு காளை தேர்வு செய்து கம்பம் நடப்பட்ட இடத்தில் படுக்க வைத்து, ஒரு சுற்று சுற்றி அவிழ்த்து விட்டனர். இதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்தை சிவனாக பாவித்து வழிபாடு நடத்தியதாகவும், கம்பம் பிடுங்கப்பட்ட இடத்தில் காளைகளை அழைத்து வந்து நந்தீஸ்வரரை வழிபட்டு, ஒரு காளையை படுக்க வைத்து ஒரு சுற்று சுற்றினால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்றும் மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ