உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கருத்தரங்கு

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கருத்தரங்கு

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கருத்தரங்குஈரோடு, செப். 18-ஈரோட்டில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 'சத்துணவு திட்டமும், ஆட்சியாளர்கள் நிலைப்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.மாவட்ட துணை தலைவர் விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் துவக்கி வைத்து பேசினார்.சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் பெரியசாமி, அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் சீனிவாசன் பேசினர்.சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே செயல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட இணை செயலாளர் செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ