உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இதுவரை சோதனையில் ரூ.1.70 கோடி பறிமுதல்

இதுவரை சோதனையில் ரூ.1.70 கோடி பறிமுதல்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால், 1.70 கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நேற்று, ஈரோடு மாநகராட்சி, பழையபாளையம், கணபதி நகரில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அவ்வழியாக டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த லோகநாதனிடம், 2 லட்சத்து, 5,250 ரூபாயை பறிமுதல் செய்தனர். அத்தொகையை, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.கிழக்கு தொகுதியில் இதுவரை, 37 லட்சத்து, 14,797 ரூபாய், மேற்கு தொகுதியில், 43 லட்சத்து, 84,490 ரூபாய், மொடக்குறிச்சி தொகுதியில், 4 லட்சத்து, 97,170 ரூபாய், பெருந்துறை தொகுதியில், 15 லட்சத்து, 79,480 ரூபாய், பவானியில், 7 லட்சத்து, 650 ரூபாய், அந்தியூரில், 4 லட்சத்து, 19,950 ரூபாய், கோபியில், 8 லட்சத்து, 88,650 ரூபாய், பவானிசாகரில், 49 லட்சத்து, 6,238 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் இதுவரை, ஒரு கோடியே, 70 லட்சத்து, 92,425 ரூபாய் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்து, 77 லட்சத்து, 18,535 ரூபாயை உரியவர்கள் திரும்ப பெற்றனர். மீதி, 99 லட்சத்து, 23,890 ரூபாய் கருவூலத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி