உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புளியம்பட்டியில் கடையடைப்பு

புளியம்பட்டியில் கடையடைப்பு

சத்தியமங்கலம்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து, புன்செய் புளியம்பட்டியில் நேற்று கடையடைப்பு நடந்தது. வணிகர்கள் சங்கம், ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கம், மரம், இரும்பு வியாபாரிகள் சங்கம், டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பாக, கடையடைப்பு நடந்தது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை கடைகள் மூடியிருந்தன. வாடகை கார்கள் இயங்கவில்லை, ஆட்டோக்கள் ஓடவில்லை. புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் நடந்த ஆர்பாட்டத்துக்கு, டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்பாஸ் அஜீத் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., சம்பூரணம், நகராட்சி தலைவர் அன்பு ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை