உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ம.க.,ஆர்ப்பாட்டம்

பா.ம.க.,ஆர்ப்பாட்டம்

பா.ம.க.,ஆர்ப்பாட்டம்பவானி:அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை அருகே அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி முன், பா.ம.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். சுங்கசாவடியிலிருந்து பவானி மற்றும் மேட்டூர் செல்லும் சாலைகளை முறையாக சீரமைக்கும் வரை, பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர். பவானி, அம்மாபேட்டை நகர, கிளை நிர்வாகிகள், 25க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.போக்சோவில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்பவானிசாகர்: பவானிசாகர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், ஈரோடு, 46 புதுாரை சேர்ந்த ஆசிரியர் தண்டபாணியை, 55, மீது, போக்சோ சட்டத்தில் பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தண்டபாணியை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை