வரட்டுப்பள்ளத்தில்சிறுத்தை நடமாட்டம்
அந்தியூர்:அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் இரவில், வரட்டுப்பள்ளம் அணை வியூ பாயின்ட் பகுதியில், ஒரு சிறுத்தை சாலையை கடந்து சென்றது.பர்கூரில் இருந்து காரில் வந்தவர்கள் சிறுத்தையை பார்த்துள்ளனர். இதேபோல் தாமரைக்கரை செல்லும் வழியில் கொண்டை ஊசி வளைவுகள், வனத்தில் உள்ள பாறைகளின் மீது சிறுத்தை படுத்திருந்ததை மக்கள் கவனித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பைக்கில் செல்வோர் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.