உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 109.8 டிகிரி வெயில்

ஈரோட்டில் 109.8 டிகிரி வெயில்

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் கடந்த பிப்., முதலே, கடும் வெயிலும், காற்று வீசாமல் வெப்பம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக தேசிய அளவில் ஈரோடு மாவட்டம், 108 முதல், 111 டிகிரி வரை வெயில் வாட்டி வருகிறது. மலைப்பகுதி உட்பட சில இடங்களில் ஓரிரு நாட்கள் மட்டும் மிக லேசான மழை பெய்தது.தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கி, மூன்றாம் நாளான நேற்று, 109.8 டிகிரி வெயில் வாட்டியது. அவ்வப்போது லேசான மேக மூட்டமும், காற்றும் வீசினாலும் வெப்பம் குறையாமலேயே நீடித்தது. வெயிலால் மதியம், 1:00 மணிக்கு மேல், 5:00 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.வெப்ப சலனத்தால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தும், மழை ஏமாற்றி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை