உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைது

இரும்பு திருடிய 3 பேர் கைதுஈரோடு, ஆக. 25-ஈரோடு, தண்ணீர் பந்தல்பாளையத்தில், ஏ.கே.ஆர்., ஸ்டீல் கடை உள்ளது. கடை உரிமையாளர் ஹபிபுல்லா கடந்த, 22ம் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையை சுற்றி போடப்பட்டிருந்த தகர கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த டையிங் கம்பெனிக்கு பயன்படுத்தும், 13 இரும்பு தகடுகள் திருட்டு போனது தெரிந்தது. இதன் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய் ஆகும்.அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக ஈரோடு, பெரியசேமூர், கனிராவுத்தர் குளம், சாஸ்திரி நகரை சேர்ந்த முருகன், 23; சின்னசேமூர் பள்ளிகூட வீதி ஹக்கீம், 23; பெரியசேமூர், கனிராவுத்தர் குளம், ஜெ.ஜெ. நகர் பூபாலன், 22, ஆகியோரை கைது செய்து, இரும்பு தகடுகளை பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரையும், ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை