மேலும் செய்திகள்
மாநகராட்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
09-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வில்லரசம்பட்டி, எல்.வி.ஆர் காலனி, எல்லப்பாளையம், கங்காபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள், இரண்டாவது மண்டல அலுவலகத்தில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்கள் பிடிக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாளில் மட்டும், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.
09-Aug-2024