உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதற்கட்டமாக 8,000 மரக்கன்று வருகை; அமைச்சர் முத்துசாமி

முதற்கட்டமாக 8,000 மரக்கன்று வருகை; அமைச்சர் முத்துசாமி

ஈரோடு:''மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முதற்கட்டமாக, 8,000 மரக்கன்றுகள் வந்துள்ளன'', என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.இதுகுறித்து ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது: எந்த ஆண்டும் இல்லாத அளவு ஈரோட்டில் இந்தாண்டு வெப்பம் நிலவ, சரியான காரணம் எனக்கு தெரியவில்லை. சில திட்டப்பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்ற நோக்கில், சில முயற்சிகளை செய்யலாம்.தி.மு.க., சார்பில் அடுத்த ஆறு மாதங்களுக்குள், ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க திட்டமிட்டுள்ளோம். எங்கெல்லாம் மரக்கன்று நடலாம் என்பது குறித்த பட்டியலை வழங்க, அனைத்து செயல்பாட்டாளருக்கும் உத்தரவிட்டுள்ளோம். தற்போது முதற்கட்டமாக, 8,000 மரக்கன்றுகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விரும்பி வரும் மக்களுக்கும் வழங்குகிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை