உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் போது தீப்பிடித்துஎரிந்த காரால் பரபரப்பு

ஓடும் போது தீப்பிடித்துஎரிந்த காரால் பரபரப்பு

பெருந்துறை;பெருந்துறையை அடுத்த மடத்துப்பாளையம், திருப்பதி கார்டனை சேர்ந்தவர் புகழேந்திரன், 47; பெருந்துறை தனியார் நிறுவன ஊழியர். மாருதி ஜென் காரில், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் அருகில் நேற்று மதியம் சென்றார். அப்போது இன்ஜின் பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.உடனடியாக காரில் இருந்து புகழேந்திரன் இறங்கிவிட்டார். அதேசமயம் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீருடன் சோப்பு நுரையை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ