உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் தேடி வந்த பெண் யானை சாவு

தண்ணீர் தேடி வந்த பெண் யானை சாவு

சத்தியமங்கலம்;கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட குரும்பூர் மலை கிராமத்தில், கடந்த, 7ம் தேதி இரவு தண்ணீர் குடிக்க வந்த பெண் யானை சிறு பள்ளத்தில் தவறி விழுந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற வனத்துறையினர், யானைக்கு குளுக்கோஸ், ஊசி மருந்து செலுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் தவறி விழுந்ததில் இடுப்பு மற்றும் முதுகில் ஏற்பட்ட காயத்தால் சிகிச்சை பலனின்றி, அன்றிரவே இறந்தது. இறந்து போன யானைக்கு, 40 வயது இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். நேற்று உடற்கூறு பரிசோதனைக்குப் பின் அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்