உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடையில் நுாதன வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது

கடையில் நுாதன வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பல் கைது

பவானி, அம்மாபேட்டை அருகே கண்ணப்பள்ளி, வெங்கடரெட்டியூரை சேர்ந்தவர் செல்வி, 42; கறிக்கடை வியாபாரி. குறிச்சி பிரிவில் கறிக்கடை வைத்துள்ளார். நேற்று கடைக்கு வந்த ஒரு ஆண், 500 ரூபாய் கொடுத்து, 100 ரூபாய்க்கு கோழிக்கறி கேட்டார். கறி வெட்டி கொடுத்துவிட்டு சில்லரை கொடுத்த போது, 100 ரூபாய் நோட்டு அழுக்காக உள்ளதாக கூறி, வேறு கேட்டுள்ளார். அதே நேரத்தில் அவருடன் வந்த ஒரு பெண், 500 ரூபாயை கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். மற்றொரு பெண், பணம் கொடுக்காமலே, 500 ரூபாய்க்கு சில்லரை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். சந்தேகமடைந்த செல்வி அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் மூவரையும் பிடித்து, அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார்.போலீஸ் விசாரணையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன், 42; பாண்டியம்மாள், 35; மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாரியம்மாள், 45; என்பது தெரிந்தது. கடைகளுக்கு சென்று குழப்பத்தை விளைவித்து, பணம் கொடுக்காமல் மோசடி செய்து வருவது தெரிந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் ஒரு டாடா சுமோ காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை