உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

பவானி:வெள்ளித்திருப்பூர் அருகே குரும்பபாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் முருகன், 14; அதே பகுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். விடுமுறையில் வீட்டில் இருந்த முருகன் நேற்று காலை அவருக்கு சொந்தமான கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்த அவரது பாட்டி சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் குதித்து முருகனை மீட்டனர். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ