உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் தடுமாறி விழுந்ததில் பலி

ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் தடுமாறி விழுந்ததில் பலி

கோபி, கோபி அருகே, ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் தடுமாறி கீழே விழுந்ததில் பலியானார்.கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன், 35. இவர் கடந்த, 19ம் தேதி தனது பேசன் ஸ்கூட்டி வாகனத்தில், கொடிவேரி அருகே சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.இந்நிலையில், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கலைவாணி, 32, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்