உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிருபர்கள் எனக்கூறி காங்கேயத்தில் மிரட்டி பணம் பறிப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

நிருபர்கள் எனக்கூறி காங்கேயத்தில் மிரட்டி பணம் பறிப்பு அமைச்சர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

காங்கேயம்: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொகுதியான காங்கேயத்தில், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களில், மாதாந்திர பத்திரிகை நிருபர்கள் எனக்கூறி, மிரட்டி பணம் பறிக்கும் செயல் அதிகரித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: காங்கேயம் அருகே ஒரு அரிசி ஆலைக்கு, மூன்று பேர் சில நாட்களுக்கு முன் சென்றுள்ளனர். அத்துமீறி நுழைந்து, புகைப்படம் எடுத்துள்ளனர். அரிசி ஆலை நிர்வாகத்தினரை பார்த்து புகை அதிகளவில் வெளியேறுகிறது. இதுகுறித்து செய்தி வெளியிடாமலிருக்க பணம் கொடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். ஆலை நிர்வாகத்தினரோ சரியான விதிகளின்படியே செயல்படுகிறோம் என கூறியுள்ளனர். ஆனால், வசூல் நிருபர்களோ நிர்வாகத்தினரை மிரட்டி பணம் கேட்கவே, மூவரையும் பிடித்து, போலீசுக்கு தகவல் தர முயன்றனர். அப்போது இருவர் தப்பி சென்று, செய்தி எடுக்க சென்ற தங்களை ஆலை நிர்வாகத்தினர் தாக்கியதாக, காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பொய் புகாரளித்தனர். இதையடுத்து போலீசார் ஆலைக்கு சென்று விசாரித்ததில், நிருபர்கள் எனக்கூறி பணம் கேட்டு மிரட்டியது தெரிந்தது. மூவரில் ஒருவர் துணைக்கு வந்ததாக கூறிய நிலையில், அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொழிற்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதாந்திர பத்திரிக்கை நிருபர் என கூறிக்கொண்டு கார்களிலும், டூவீலர்களிலம், காங்கேயம், தாரபுரம் பகுதியில் தொழிற்சாலைகளை குறிவைத்து வசூலிக்கும் சம்பவம் சமீபமாக அதிகரித்துள்ளது. செய்திதுறை அமைச்சர் தொகுதியிலேயே இதுபோன்ற நிகழ்வு நடப்பது அதிர்ச்சியாக உள்ளது. போலீசாரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்காமல், சமாதானம் பேசுவதிலேயே குறியாக உள்ளனர். இது தொடர்பாக செய்தித்துறை அமைச்சர், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ