கோபி;கோபி, தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி, 600க்கு 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி விகாஷினி, 600 க்கு 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். உயிரியல் பாடப்பிரிவில் மாணவர் பரணிதரன், 600க்கு 586 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். உயிரியல் பாடப்பிரிவில் மாணவர் நந்தா, இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றார்.பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர்கருப்பணன், பள்ளி செயலர் கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் கேடயம் வழங்கி பாராட்டினர். பள்ளியில் இயற்பியல் பாடத்தில் நான்கு பேர், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தில் மூன்று பேர், கணினி அறிவியல் இரண்டு பேர், கணிதம் ஒன்பது பேர், பொருளியல் நான்கு பேர், வணிகவியல் நான்கு பேர், கணக்குப்பதிவியல் இரண்டு பேர், கணினி பயன்பாடுகள் இரண்டு பேர், அடிப்படை இயந்திரவியல் நான்கு பேர், வேலைவாய்ப்பு திறன் இரண்டு பேர் என, நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.இது தவிர இன்ஜினியரிங் கட் ஆப்பில், 200க்கு 200 இரண்டு பேர், 199க்கு மேல் 5 பேர், 190 க்கு மேல், 16 பேர், 185க்கு மேல் 19 பேர், 180க்கு மேல் 25 பேர் எடுத்துள்ளனர்.