உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் கலைவிழா

வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் கலைவிழா

ஈரோடு: திண்டல் வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் உத்பவ்-2024 கலைவிழா நடந்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சந்திரசேகர் வரவேற்றார். பொருளாளர் அருண், துணை செயலர் நல்லசாமி வாழ்த்துரை வழங்கினர். பள்ளி ஆலோசகர் பாலசுப்ரமணியம், யுவராஜா மற்றும் வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஷியாமளா ரமேஷ்பாபு கலந்து கொண்டார். பள்ளி முதன்மை முதல்வர் நல்லப்பன், பிரேமலதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும், விழாவில் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ