உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நலவாரியங்களில் 21,389 பேருக்கு உதவி

நலவாரியங்களில் 21,389 பேருக்கு உதவி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற, 21,389 பேருக்கு, 17.32 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில், 2008 முதல் நடப்பாண்டு மார்ச் வரை, கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், 40,979 தொழிலாளர், உடலுழைப்பு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில், 69,172 தொழிலாளர், அமைப்பு சாரா ஓட்டுனர், தானியங்கி வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், 6,262 தொழிலாளர் என, ஒரு லட்சத்து, 16,413 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.கடந்த மார்ச் வரை, 18,664 தொழிலாளர் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகை, 3.93 கோடி ரூபாய், 304 தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகை, 38.30 லட்சம் ரூபாய், 13 பேருக்கு மகப்பேறு உதவித்தொகை, 75,000 ரூபாய் 29 பேருக்கு கண் கண்ணாடிக்காக, 16,750 ரூபாய் என, 21,389 தொழிலாளர்களுக்கு, 17 கோடியே, 32 லட்சத்து, 17,402 ரூபாய் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ