உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா

மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் விழா

மாணவ, மாணவிகளுக்குசைக்கிள் வழங்கும் விழா பெருந்துறை, ஆக. 22-பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், 107 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராவுத்தப்பன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தினகரன் வரவேற்றார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் பெரியசாமி, மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். பள்ளபாளையம் டவுன் பஞ்., தலைவர் கோகிலவாணிதங்கமுத்து, காஞ்சிக்கோவில் நகர தி.மு.க., செயலர் செந்தில் முருகன், பள்ளபாளையம் நகர செயலர் தங்கமுத்து, மாவட்ட மகளிர் அணி தலைவி காந்திமதி, காஞ்சிக்கோவில் டவுன் பஞ்., முன்னாள் தலைவர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை