உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா தொடக்கம்

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா தொடக்கம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டத்தின் ஏழாம் ஆண்டு விழா, சத்தி சுந்தர் மஹாலில், நேற்று நடந்தது. ரோட்டரி சத்தி டைகர்ஸ் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். இதையொட்டி புத்தக திருவிழாவை எழுத்தாளர் ஈரோடு கதிர், தொடங்கி வைத்தார். வாகசர் வட்ட தலைவர் யாழினி ஆறுமுகம் வர-வேற்றார். புத்தக கண்காட்சியில் தினமும் மாலையில், சொற்பொ-ழிவு நடக்கிறது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் இன்று பேசு-கிறார். திரைப்பட இயக்குனர் அஜயன்பாலா, எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் நாளை பேசுகின்றனர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியை பாராட்டி, கோவை சதா-சிவம், 16ம் தேதி பேசுகிறார். எழுத்தாளர் பவுசியா இக்பால், 17ம் தேதி பேசுகிறார். எழுத்தாளர், கதை சொல்லி பவா செல்ல-துரை, 18ம் தேதி விழா நிறைவுரையாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை