உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அறநிலையத்துறையினர் அமைச்சரிடம் கோரிக்கை

அறநிலையத்துறையினர் அமைச்சரிடம் கோரிக்கை

ஈரோடு;ஈரோடு, பெரியார் நகர், பொய்யேரிக்கரையில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கருப்பண்ணசுவாமி கோவிலை ஒட்டி, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 20 ஆயிரம் சதுர அடி இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் பாழடைந்த கட்டடம், பயன்பாடின்றி உள்ளது. கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி மேறகொள்வது தொடர்பாக, அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தை, கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு வழங்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி