உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆன்லைன் பிளான் அப்ரூவல் கட்டண உயர்வு ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு; அமைச்சர் தகவல்

ஆன்லைன் பிளான் அப்ரூவல் கட்டண உயர்வு ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு; அமைச்சர் தகவல்

ஈரோடு: ''ஆன்லைன் பிளான் அப்ரூவல்' கட்டண உயர்வு தொடர்பாக, ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,'' என,அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு இலவச இணை சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். சீருடைகளை வழங்கி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும், 43,231 மாணவர், 43,082 மாணவியர் என, 86,313 பேருக்கு இலவச இணை சீருடை வழங்கப்படுகிறது. வரும், 1ம் தேதி இரவு, விளை-யாட்டு துறை அமைச்சர் உதயநிதி வருகை புரிகிறார். 2ம் தேதி காலை வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் டிராக்கை துவக்கி வைத்து, பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்-கிறார்.ஈரோடு சி.என்.கல்லுாரி வளாகத்தில் ஒரு ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துள்ளது. அதற்கு முன்பாக சோலாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு ஸ்டேடியம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.'ஆன்லைன் பிளான் அப்ரூவல்' பற்றி, இரு மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டதாக தவறாக சொல்கின்றனர். முன்பு, 4, 5 பிரி-வாக பணம் செலுத்த வேண்டியிருந்தது. பல விதமாக கட்டணம் செலுத்தினர். தற்போது ஒன்றாக சேர்த்து செலுத்த கூறியுள்ளோம். புதிய கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். இக்கட்-டணம் பற்றி ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்-படி முன்பு ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு செலுத்தினர், தற்-போது எவ்வளவு செலுத்துகின்றனர், என கணக்கிட்டு முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பித்து உடன் அனுமதி பெறாலம். சில நேரம் பணியை துவங்கிவிட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விதிகளை மீறி கட்டக்கூ-டாது. இவ்வாறு கூறினார்.மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ