உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேங்காய், கொப்பரை, எள் ரூ.26.37 லட்சத்துக்கு ஏலம்

தேங்காய், கொப்பரை, எள் ரூ.26.37 லட்சத்துக்கு ஏலம்

கொடுமுடி:கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. தேங்காய் ஏலத்துக்கு, 9,987 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 18.29 ரூபாய் முதல் 26.89 ரூபாய் வரை விலை போனது.கொப்பரை தேங்காய், 479 மூட்டை வந்தது. முதல் தரம் கிலோ, 93.89 ரூபாய் முதல் 96.29 ரூபாய்; இரண்டாம் தரம், 62.79 ரூபாய் முதல் 92.60 ரூபாய் வரை ஏலம் போனது.எள் மூட்டை, 63 வந்தது. கறுப்பு எள் கிலோ, 115.69 ரூபாய் முதல் 14௧ ரூபாய்; சிவப்பு எள் கிலோ, 93.89 ரூபாய் முதல் 136.59 ரூபாய் வரை விலை போனது. தேங்காய், கொப்பரை, எள் மூன்றும், 26.37 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை