உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வி.சி., நிர்வாகி மீது புகார்

வி.சி., நிர்வாகி மீது புகார்

ஈரோடு:விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி, ஈரோடு எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் ஐமன்னன் தலைமையில், எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனு:ஈரோடு, சோளங்காபாளையம் அருகே, முனியப்பன் பாளையத்தை சேர்ந்த ஹரீஷ், கடந்த மாதம், 26ல் கொலை செய்யப்பட்டார். இதன் பின் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இருவரும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இக்கொலை கண்டனத்துக்குரியது.அதேசமயம் மலையம்பாளையம் போலீசாரின் நியாயமான விசாரணையை அச்சுறுத்தும் வகையில், போலீசார் பற்றி பொய் செய்திகளை பரப்பி, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மக்களிடையே போலீசார் மற்றும் அரசுக்கு அவப்பெயரை உருவாக்க முற்படும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ