உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மளிகை கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

மளிகை கடைக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நம்பியூர் : நம்பியூர் அருகே பிலியம்பாளையத்தில், மளிகை கடை நடத்தி வருபவர் புவனேஸ்வரி. நேற்று காலை வழக்கம்போல் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறு தவளையை ஒரு பாம்பு துரத்தி வந்தது. ஒரே சமயத்தில் இரண்டும் கடைக்குள் புகுந்து விட்டது. இதில் தவளை வேறிடத்துக்கு சென்று தப்பிவிட்டது. பாம்பால் வெளியே வர முடியாமல் சாக்கு மூட்டை நடுவில் பதுங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, நம்பியூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி, சாக்கு மூட்டை நடுவில் சுருண்டு படுத்திருந்த பாம்பை, கருவி உதவியுடன் லாவகமாக பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை