உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தண்ணீர் திறக்க தாமதம்:விவசாயிகள் போராட்டம்

தண்ணீர் திறக்க தாமதம்:விவசாயிகள் போராட்டம்

தாராபுரம்;பி.ஏ.பி., பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க தாமதமானதால், பொதுப்பணித் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.தாராபுரத்தை அடுத்த குண்டடம், செங்காளிபாளையம், கணபதிபாளையம், ருத்ராவதி உள்ளிட்ட பி.ஏ.பி. பாசன பகுதிகளுக்கு, கடந்த மார்ச், 27ம் தேதி முதல் சுற்றுக்கான தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டாவது சுற்று தண்ணீர் விடப்படாததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை, நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் கழித்து வந்த அதிகாரிகள், விவசாயிகளுடன் கலந்து பேசி, தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி