உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில் நிலத்தில் கட்டப்பட்ட சர்ச் கட்டடம் இடித்து அகற்றம்

கோவில் நிலத்தில் கட்டப்பட்ட சர்ச் கட்டடம் இடித்து அகற்றம்

ஈரோடு, கொடுமுடி தாலுகா புஞ்சை கொளாநல்லி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாம்பலங்கார சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான, 110 ஏக்கர் புஞ்சை நிலம், 131 பேருக்கு குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் கோவிலுக்கு சொந்தமான, 0.12 சென்ட் புஞ்சை நிலத்தை நீண்ட காலமாக பெந்தகோஸ் சபையினர், சர்ச் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. இதன்படி ஆக்கிரமிப்புதாரர்கள் சர்ச்சை காலி செய்தனர். இதை தொடர்ந்து மக்கள் முன்னிலையில் சர்ச் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. மலையம்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் பாதுகாப்பு வேலி அமைத்து, கோவில் நிலம் என்று அறிவிப்பும் வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ