மேலும் செய்திகள்
சாம்பார் பார்சலில் பூச்சி ஹோட்டலுக்கு அபராதம்
28-Aug-2024
ஈரோடு,:ஈரோடு, லக்காபுரம், கருக்கம்பாளையத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஸ்ரீகாந்த், 39. இவர், ஈரோட்டில் காந்திஜி சாலையில் கருப்பண்ணா ஹோட்டலில் நேற்று காலை, இரண்டு சப்பாத்தி, நான்கு இட்லி பார்சல் வாங்கினார். சப்பாத்தியை அவர் மகளுக்கு ஊட்டி விட முயன்றபோது, ஒருவித வாடை வந்தது. இதனால் மகளுக்கு கொடுக்காமல் முகர்ந்து பார்த்தபோது, கெட்டுப்போனது தெரிந்தது.அதிர்ச்சியடைந்த அவர், ஹோட்டலுக்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, ஸ்ரீகாந்துக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஹோட்டலை பூட்டி ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். சூரம்பட்டி போலீசார் ஹோட்டலுக்கு சென்று, ஸ்ரீகாந்திடம் விசாரித்தனர்.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அருண்குமார், சம்மந்தப்பட்ட ஹோட்டலை திறந்து ஆய்வு நடத்தினர். ஹோட்டல் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், காலாவதி உணவு பொருட்கள் எதுவும் இல்லை என, கண்டறிந்தனர். ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ஹோட்டலை சுகாதாரமாக பராமரிப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். இந்த ஹோட்டலில், 2022 ஜூன் 15ல் இறந்து போன பல்லி மிதந்த குழம்பை சாப்பிட்ட, பெண் உட்பட நான்கு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
28-Aug-2024