உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவை வேளாண்மை கல்லுாரி மாணவர்களின் வயல்வெளி கற்றல்

கோவை வேளாண்மை கல்லுாரி மாணவர்களின் வயல்வெளி கற்றல்

கொடுமுடி: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளா ண்மை பல்கலை கழகம், வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் வேளாண்மை மாணவர்கள் ஒன்பது பேர், கொடுமுடி ஒன்றியத்தில் விவசாயிகளின் நடைமுறை வாழ்க்கை, விவசாய தொழில்நுட்பங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றை கிராமத்தில் தங்கி அவர்களோடு வாழ்ந்து கிராம அனுபவ திட்டத்தை பகிர்ந்து கொண்டனர்.இது குறித்து மாணவர்கள் அருண் சங்கர், கபிலன், அவிநாஸ்வர்மா, அர்ஜுன், சஞ்சீவ் பிரசாத், ஸ்ரீ சாய், பிரவீன் ராஜா, மோலீஸ்வரன் மற்றும் நித்திஷ் கூறியதாவது: கடந்த, 15 நாட்களாக கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள சாலைப்புதுாரில் தங்கி, விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று பல்வேறு பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் கற்று வருகிறோம். மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மஞ்சள் வேகவைக்கும் தொழில்நுட்பம் போன்றவற்றை களத்தில் சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறோம்.விவசாயி மாரிமுத்து வயலில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்கின்றனர். இதில், நாங்கள் களை எடுக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம். களைகளை எடுப்பது சாதாரண விஷயமாக இது நாள் வரை நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். தோட்டத்தில் இறங்கி வேலை செய்யும் போது, விவசாயிகளின் கடின உழைப்பு, அவர்கள் படும் இன்னல்கள் ஆகியவற்றை எங்களால் நேரடியாக உணர முடிந்தது. வரும் நாட்களில், அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் சம்பந்தமான விளக்க உரைகள், செயல்முறை விளக்கங்கள் கொடுக்க உள்ளோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ