உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தைப்புலி நடமாட்ட பீதிஆய்வு செய்த வனத்துறை

சிறுத்தைப்புலி நடமாட்ட பீதிஆய்வு செய்த வனத்துறை

சிறுத்தைப்புலி நடமாட்ட பீதிஆய்வு செய்த வனத்துறைகாங்கேயம்:காங்கேயத்தை அடுத்த பரஞ்சேர்வழி, திட்டுப்பாறை பகுதிகளில், சில வாரங்களுக்கு முன் நாய்கள் கடித்து, 15க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன. இந்நிலையில் இப்பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து காங்கேயம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் போனதால், வனத்துறை அலுவலர் மவுனிகா தலைமையில் சம்பந்தப்பட்ட இடத்தில் நேற்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து மவுனிகா கூறியதாவது: சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை புலி நடமாட்டத்துக்கான தடயம் இல்லை. தவறான தகவல் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் வதந்திகளை நம்ப வேண்டாம், அச்சமடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ