உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்

50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள்

கொடுமுடி : கொடுமுடி வேளாண் உதவி இயக்குனர் யசோதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதை வழங்கப்படவுள்ளது. ஒரு ஏக்கருக்கு, 10 கிலோ பசுந்தாள் உர விதை வழங்கப்படும். மண்புழு உர உற்பத்தியை ஊக்குவிக்க கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு இரண்டு மண்புழு உரப்படுகை, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு வேப்பங்கன்றுகள், ஏக்கருக்கு, 200 வீதம் அதிகபட்சம், 5 ஏக்கருக்கு, ௧,௦௦௦ மரக்கன்று வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். அல்லது உழவன் செயலியிலும் பதிவு செய்யலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை