உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹெச்.எம்., பணியிடம் மேல்நிலை பள்ளிகளில் முழுமையாக பூர்த்தி

ஹெச்.எம்., பணியிடம் மேல்நிலை பள்ளிகளில் முழுமையாக பூர்த்தி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடம் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்-டுள்ளது.முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்-கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், இரண்டாது நாளாக நேற்றும் நடந்தது. இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதேபோல் அரசு, நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கவுன்சிலிங் நேற்று முன்தினம் நடந்தது.இதற்கு விண்ணப்பித்திருந்த இரண்டு பேர் பங்கேற்றனர். ஆனால் எதிர்பார்த்த இடம் கிடைக்காததால், ஏற்கனவே பணி-யாற்றும் பள்ளியில் தொடர முடிவு செய்தனர். கவுன்சிலிங்கிற்கு பின் மாவட்டத்தில் தற்போது, அரசு மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் எங்கும் காலியாக இல்லை. அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் தலைமை ஆசிரி-யர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறையினர் தெரி-வித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை