உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொந்த நுாலகம் வைத்திருப்போர் விருது பெற அழைப்பு

சொந்த நுாலகம் வைத்திருப்போர் விருது பெற அழைப்பு

ஈரோடு, ஆக. 29-வீடு தோறும் நுாலகங்கள் அமைக்க வேண்டும் என, அரசு வலியுறுத்துகிறது. அதற்காக மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறது. அதில் வீடு தோறும் நுாலகம் அமைத்து, சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, 1.14 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது.வீடு தோறும் நுாலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தனி நபருக்கு, ஈரோடு மாவட்டத்தில் சொந்த நுாலகத்துக்கான விருது, 3,000 ரூபாய் மதிப்பில் கேடயம், சான்றிதழ் ஆகியவை கலெக்டரால் வழங்கி கவுரவிக்கப்படும்.பரிசு வழங்கும் நாள் பின் அறிவிக்கப்படும். இதற்கு தனி நபர் அல்லது பிறர் வழியாக எத்தனை நுால்கள் உள்ளன, எந்த வகையான நுால்கள், அரிய நுால்கள் உள்ளதா, எத்தனை ஆண்டுகளாக பராமரிக்கப்படுகிறது என்ற விபரங்களுடன், தங்கள் பெயர், முகவரி, கைபேசி எண்ணுடன் வரும் அக்., 14க்குள் வாட்ஸ் ஆப் அல்லது மெயில் மூலம் படிவம் அனுப்பலாம். பயனாளிகள், வாட்ஸ் ஆப் எண்: 7598395352, மெயில் முகவரி: gmail.com, முகவரி, 'மாவட்ட நுாலகம், மாவட்ட நுாலக அலுவலகம், வீரபத்திர வீதி, ஈரோடு-638003' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ