உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் திருடி தப்ப முயன்றவர் கைது

பைக் திருடி தப்ப முயன்றவர் கைது

கோபி : பவானி அருகே மைலாம்பாடியை சேர்ந்தவர் பிரகாஷ், 26; கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தில் ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவருடன் பணிபுரியும் ஊழியர் கோவர்த்தன், 23; இவரது பல்சர் பைக்கை, நேற்று முன்தினம் இரவு, கம்பெனி அருகே நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் இருவர், பைக்கை திருடி தப்ப முயன்றனர். இதைக்கண்ட அப்பகுதியினர் சத்தமிடவே பைக்கை போட்டுவிட்டு தப்ப முயன்றனர். ஒரு ஆசாமி சிக்க, சிறுவலுார் போலீசில் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில் கோவையை சேர்ந்த பிரகாஷ், 25, எனவும், தப்பிய நபர் பெங்களூரை சேர்ந்த, தமிழரசன், 30, என்பதும் தெரிந்தது. கம்பெனி மேலாளர் பிரகாஷ் புகாரின்படி, பைக் திருடிய பிரகாசை, சிறுவலுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ