உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொறுப்பு மையத்துக்கு மாதம் ரூ.2,000 கேட்கும் சத்துணவு ஊழியர்

பொறுப்பு மையத்துக்கு மாதம் ரூ.2,000 கேட்கும் சத்துணவு ஊழியர்

ஈரோடு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஈரோடு ஒன்றிய, மாநகராட்சி அமைப்பு சார்பில் கிளை மாநாடு ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயா, சித்ரா, மாநகராட்சி பொறுப்பாளர்கள் பவுர்ணா, விஜயா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள, 50,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும். மாதாந்திர சில்லரை செலவீனம், 250 ரூபாயாக உயர்த்த வேண்டும். 10 ஆண்டு பணி நிறைவு செய்த அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கூடுதல் மைய பொறுப்புக்கு, ஒரு மையத்துக்கு மாதம், 2,000 ரூபாய் வழங்க வேண்டும். காஸ் அடுப்பு பழுதானால், அதை சரி செய்யும் செலவினம் அதே மாதம் வழங்க வேண்டும். 2 ஆண்டுக்கு ஒரு முறை புதிய காஸ் அடுப்பு வழங்க வேண்டும். சமையலர், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை