உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் அணிவகுப்பு

கொடுமுடியில் அணிவகுப்பு

கொடுமுடி;லோக்சபா தேர்தலில் மக்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில், போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்படி கொடுமுடியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. மகுடேஸ்வரர் கோவில் பகுதியில் தொடங்கி போலீஸ் ஸ்டேஷன்ல் அருகில் முடிந்தது. கொடுமுடி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார், ஈரோடு ஆயுத படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பங்கேற்றனர்.* பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், சென்னிமலை இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில், சென்னிமலையில் நேற்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.வடக்கு ராஜவீதியில் துவங்கி ஈரோடு ரோடு, அரச்சலூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், காங்கேயம் ரோடு, தெற்கு, மேற்கு ராஜ வீதிகள் வழியாக போலீஸ் ஸ்டேசன் சென்று அணிவகுப்பு முடிந்தது.சென்னிமலை போலீசார், ரிசர்வ் போலீஸ் படையினர், போலீசார், தேசிய மணவர் படையினர் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ