உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறை வட்ட ஜமாபந்தி நாளை துவக்கம்

பெருந்துறை வட்ட ஜமாபந்தி நாளை துவக்கம்

பெருந்துறை:பெருந்துறை வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி), நாளை தொடங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது.நாளை பெருந்துறை உள் வட்டத்துக்கு உட்பட்ட சீனாபுரம், பட்டகாரன்பாளையம், பெருந்துறை, விஜயபுரி, கம்புளியம்பட்டி, வீரசங்கிலி, மேட்டுபுதூர், பாலக்கரை, கருமாண்டிசெல்லிபாளையம் கிராமங்களுக்கு நடக்கிறது.21ம் தேதி திங்களூர் உள் வட்டம் தோரணவாவி, திங்களூர், பாப்பம்பாளையம், கருக்கபாளையம், நிச்சாம்பாளையம், நல்லாம்பட்டி, ஊஞ்சப்பாளையம், பாண்டியம்பாளையம், சிங்காநல்லுார் கிராமங்களுக்கு நடக்கிறது. 25ம் தேதி காஞ்சிக்கோவில் உள்வட்டம் பெத்தாம்பாளையம், முள்ளம்பட்டி, காஞ்சிக்கோவில், திருவாச்சி, பள்ளபாளையம் கிராமங்களுக்கு நடக்கிறது.26ம் தேதி வெள்ளோடு உள் வட்டம் ஈங்கூர், வரபாளையம், தென்முகம் வெள்ளோடு, வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம் கிராமங்களுக்கு நடக்கிறது.27ம் தேதி சென்னிமலை உள் வட்டம் சென்னிமலை, கொடுமணல், அட்டவணை பிடாரியூர், முகாசிபிடாரியூர், சிறுகளஞ்சி, வாய்பாடி, பசுவபட்டி, எக்கடாம்பாளையம், முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், எல்லைகிராமம், பாலத்தொழுவு கிராமங்களுக்கு நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ