உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வருமான வரி பிடித்தத்துக்கு எதிர்ப்பு மாவட்ட கருவூல அதிகாரியிடம் மனு

வருமான வரி பிடித்தத்துக்கு எதிர்ப்பு மாவட்ட கருவூல அதிகாரியிடம் மனு

ஈரோடு:ஈரோடு மாவட்ட கருவூல அலுவலகத்தில், மாவட்ட கருவூல அலுவலர் சேஷாத்ரி தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது. உதவி கருவூல அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர், மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மனு வழங்கினர்.அதில் கூறியிருப்பதாவது:வருமான வரித்துறை அலுவலக உத்தரவுப்படி, கருவூலத்துறை ஆணையர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் புதிய, பழைய வருமான வரி பிடித்தம் என்ற பெயரில் எவ்வித முன்னறிவிப்பு, ஆலோசனை இன்றி தமிழகத்தில் மட்டும் ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்களிடம், 1,000 கோடி ரூபாய் வருமான வரி என்ற பெயரில் பிடித்தம் செய்ததாக வந்த தகவலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.ஆண்டுக்கு, 62,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி பிடித்தமும், 45,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவோருக்கு பழைய வருமான வரி பிடித்தம் செய்வதும், மே, 15க்குள் தங்களது பான் கார்டை கருவூலத்தில் பதிவு செய்யாதவர்களில் ஆண்டுக்கு, 3 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவோர் இரட்டை வருமான வரி செலுத்த வேண்டும் என கூறுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ