உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊதியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

ஊதியூர் அருகே குடிநீர் கேட்டு மறியல்

ஊதியூர்: காங்கேயம் தாலுகா குண்டடம் யூனியன், எல்லப்பாளையம் பஞ்., சாய்ராம் நகரில், 350க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அமராவதி மற்றும் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது.போர்வெல் தண்ணீரையும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வறட்சியால் போர்வெல் தண்ணீர் கிடைக்காமல், ஒரு வாரமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு, தாராபும் சாலையில் கொடுவாய் கனரா வங்கி அருகில் நேற்று மதியம் சாலை மறியல் செய்தனர். காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், குண்டடம் பி.டி.ஓ., விஜயகுமார் சமரச பேச்சு நடத்தினர்.உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ