உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தபால் ஓட்டு; வழிகாட்டுதல் வெளியீடு

தபால் ஓட்டு; வழிகாட்டுதல் வெளியீடு

திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில், 7, 184 தபால் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலாவதாக, தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்.தபால் ஓட்டு சரிபார்ப்புசர்வீஸ் வாக்காளரின் 'ஆன்லைன்' தபால் ஓட்டு (இ.டி.பி.பி.எஸ்.,), தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பணியாளர்களின் தபால் ஓட்டு (பி.பி.எஸ்.,) என இரண்டு வகையான தபால் ஓட்டுக்கள் உள்ளன. சர்வீஸ் வாக்காளர்களின் தபால் ஓட்டுக்களில் உள்ள க்யூ.ஆர்., குறியிடுகளை ஸ்கேன் செய்து சரிபார்க்கவேண்டும். போலி தபால் ஓட்டுக்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக புகார் அளிக்கவேண்டும். தபால் ஓட்டுக்களில் படிவம் 13 சி ஐ திறந்து, உறுதி மொழி படிவத்தை (படிவம் 13-ஏ) சரிபார்க்கப்படும். படிவம் 13பி உறையை பிரித்து, அதிலுள்ள ஓட்டுச்சீட்டுக்கள் தனியே எடுக்கப்படும். தபால் ஓட்டுக்களில், உறுதி மொழி படிவம் இல்லையென்றாலோ; உறுதிமொழி படிவத்தில் வாக்காளர் முறையாக கையெழுத்திடவில்லை அல்லது அதிகாரி சான்றிளிக்கவில்லை என்றாலோ தபால் ஓட்டு நிராகரிக்கப்படும்.ஓட்டு எண்ணிக்கைதகுதியான தபால் ஓட்டுக்கள், வேட்பாளர் வாரியாக பிரித்து, தலா, 50 ஓட்டுச்சீட்டு கொண்ட பண்டலாக வைக்கப்படும். இறுதியாக எண்ணப்பட்டு, வேட்பாளர்கள் பெற்ற தபால் ஓட்டு விவரம் அறிவிக்கப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ