ஈரோடு: ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் கூண்டோடு இட-மாற்றம் செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு இடங்களில், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பணியாற்ற போலீசாருக்கு ஓராண்டு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி மதுவிலக்கு பிரிவில் பணியாற்ற, பிற போலீசாரிடம் விருப்ப மனு பெறப்பட்டு பணியிடம் ஒதுக்கப்-படும். இந்நிலையில் மாவட்ட மதுவிலக்கு போலீசார், அனை-வரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஈரோடு மதுவிலக்கு எஸ்.ஐ., குகனேஸ்வரன், -கடத்துார் ஸ்டேஷனுக்கும், எஸ்.எஸ்.ஐ.,க்களான ஹரிதாஸ்,- சித்தோட்-டுக்கும்; சின்னசாமி சூரம்பட்டி; இம்தியாஷ் அகமது- ஈரோடு டவுன்; அங்கப்பன் -பவானி; செந்தில்குமார்--மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.கோபி மதுவிலக்கு எஸ்.எஸ்.ஐ.க்களான கருப்புசாமி, லதா கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், செல்வன்--கருங்கல்பா-ளையம்; காசிலிங்கம்--சித்தோடு; சிவக்குமார்--கவுந்தப்பாடி; ஜாகீர்--பவானிசாகர்; ஆசனுார் பெருமாள் -புளியம்பட்டி; மாரிமுத்-து--பவானிசாகர் என, எஸ்.ஐ, எஸ்.எஸ்.ஐ, போலீசார் என, 32 பேர் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்யப்-பட்டுள்ளனர்.ஈரோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு, பங்களாபுதுார் எஸ்.ஐ., அசோக்குமார்; பவானி எஸ்.எஸ்.ஐ., துளசிமணி; திங்-களூர் எஸ்.எஸ்.ஐ., குமாரசாமி கோபி மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வீரப்பன்சத்திரம் ஸ்டேஷனில் பணியாற்றிய திருலோகசுந்தர் ஆசனுாருக்கும், நம்பியூர் எஸ்.எஸ்.ஐ., மகேஷ் உள்பட, 39 பேரை புதிதாக பணியமர்த்தி ஈரோடு எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.